Back to homepage

மேல் மாகாணம்

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔24.Oct 2017

உள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும்

மேலும்...
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் 0

🕔24.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி

மேலும்...
ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்

ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம் 0

🕔24.Oct 2017

  தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுத்து மூலம் வேண்டுகோள்

மேலும்...
இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு

இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு 0

🕔24.Oct 2017

புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று, மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.

மேலும்...
ஆணுறுப்பைக் காட்டிய முச்சக்கர வண்டிச் சாரதி; படம் பிடித்து, பொலிஸில் முறைப்பாடு செய்தார் இளம் பெண்

ஆணுறுப்பைக் காட்டிய முச்சக்கர வண்டிச் சாரதி; படம் பிடித்து, பொலிஸில் முறைப்பாடு செய்தார் இளம் பெண் 0

🕔23.Oct 2017

முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது ஆணுப்பை பகிரங்கமானதொரு இடத்தில் வைத்து இளம் பெண்ணொருவருக்கு காட்டி, மோசமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் – நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், குறித்த சாரதி அவ்வாறு நடந்து கொண்டமையினையும்  அவரின் முச்சக்கர வண்டியின் இலக்கத் தகட்டினையும் தனது காரில் பொருத்தப்பட்டிருந்த கமரா மூலம் படம் எடுத்துக்

மேலும்...
தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, 02 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியாகிறது

தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, 02 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியாகிறது 0

🕔23.Oct 2017

அரிசித் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு, அவசரமாக மேலும் இரண்டு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் தலைமையில்

மேலும்...
சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர்

சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர் 0

🕔22.Oct 2017

புதிய அரசியலமைப்புக் குறித்து சரியாகத் தெரிந்து கொள்ளாமல், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டினார். கொலனாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை, அலறி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில்,

மேலும்...
முதுகெலும்புள்ள ஒருவரிடம் பதவியை வழங்குமாறு, மஹிந்த தேசப்பிரியவுக்கு, சட்டத்தரணிகள் சங்கம் அறிவுரை

முதுகெலும்புள்ள ஒருவரிடம் பதவியை வழங்குமாறு, மஹிந்த தேசப்பிரியவுக்கு, சட்டத்தரணிகள் சங்கம் அறிவுரை 0

🕔22.Oct 2017

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய விலகி, தேர்தலை நடத்தக் கூடிய முதுகெலும்புள்ள ஒருவருக்கு அந்தப் பதவியினை வழங்க வேண்டும் என்று, சட்டத்தரணிகள் சங்கத்தின் இணைப்பாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது

அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது 0

🕔22.Oct 2017

லொறிகள் முலம் அத்தியாவசிய பொருட்களின் நடமாடும் விற்பனை சேவையினை, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கவுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்குகிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வியாங்கொட, மினுவாங்கொட, கம்பஹா,  ராகம, கனேமுல்லை, மருதானை, ஹோமகம, கிரிபத்கொடமற்றும்  தெல்கந்த

மேலும்...
மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு

மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு 0

🕔22.Oct 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்கப்படலாம் என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சி நடத்துகின்ற கூட்டங்களில், அந்தக் கட்சியில் பதவிகளை இழக்கும் எந்தவொரு நபரும் கலந்து கொள்ள முடியாது எனவும்

மேலும்...
கோட்டா விரைவில் கைதாவார்; கடந்த வாரம் கைது செய்ய வகுத்திருந்த திட்டம், கடைசி நேரத்தில் நிறுத்தம்

கோட்டா விரைவில் கைதாவார்; கடந்த வாரம் கைது செய்ய வகுத்திருந்த திட்டம், கடைசி நேரத்தில் நிறுத்தம் 0

🕔22.Oct 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாவை கைது செய்வது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கிடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த வாரம் நாடு திரும்பிய போது, விமான

மேலும்...
வாகன விபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் காயம்; மோதிய வாகனத்தில் கஞ்சா சிக்கியது

வாகன விபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் காயம்; மோதிய வாகனத்தில் கஞ்சா சிக்கியது 0

🕔22.Oct 2017

முன்னாள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன, வாகன விபத்தில் காயமடைந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை – கொழும்பு வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பயணித்த வாகனத்துடன் மற்றொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சரின் வானத்துடன் மோதுண்ட வாகனத்தை

மேலும்...
ரோஹிங்ய அகதிகளை அச்சுறுத்திய தேரருக்கு விளக்க மறியல்

ரோஹிங்ய அகதிகளை அச்சுறுத்திய தேரருக்கு விளக்க மறியல் 0

🕔21.Oct 2017

ரோஹிங்ய அகதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலவேக அமைப்பின் செயலாளர் அரம்பபொல ரத்னசார தேரரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் தேரரை ஆஜர் படுத்திய போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. கல்கிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும்

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது 0

🕔20.Oct 2017

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ரோஹிங்ய அகதிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அரம்பபொல ரத்னசார தேரர், இன்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து, சிறப்பு பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த தேரர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2017

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க; சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் செவ்வாய்கிழமை இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, முடிவு எடுக்கப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்