ஆணுறுப்பைக் காட்டிய முச்சக்கர வண்டிச் சாரதி; படம் பிடித்து, பொலிஸில் முறைப்பாடு செய்தார் இளம் பெண்

🕔 October 23, 2017

முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது ஆணுப்பை பகிரங்கமானதொரு இடத்தில் வைத்து இளம் பெண்ணொருவருக்கு காட்டி, மோசமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் – நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், குறித்த சாரதி அவ்வாறு நடந்து கொண்டமையினையும்  அவரின் முச்சக்கர வண்டியின் இலக்கத் தகட்டினையும் தனது காரில் பொருத்தப்பட்டிருந்த கமரா மூலம் படம் எடுத்துக் கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட பெண் – தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு ஆபிகோ நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில், தன்னுடைய காரில் தாய்க்காக, மேற்படி பெண் காத்துக் கொண்டிருந்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றதுள்ளது.

இது தொடர்பில் அப் பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குடுப்பிடுகையில்;

‘இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறானதொரு பொது இடத்தில் இப்படிச் செய்வதற்கு யாருக்குத்தான் தைரியம் வரும்?

வாகனத் தரிப்பிடத்தில் எனது காருக்கு பக்கத்திலிருந்த வாகனம் சென்றபோது, எனது வலது பக்கமாக அந்த முச்சக்கர வண்டி வந்து நின்றது. அப்போது எனது கைத்தொலைபேசியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், அருகில் நடப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது.

அப்போது அவன் அதைச் செய்ய ஆரம்பித்தான். வீடியோவைப் பார்க்கும் போது, நடந்தது என்ன என்பதை உங்களால் அனுமானிக்க முடியும். அதை நான் கணக்கில் எடுக்காமல் விட்டால், அந்த நபர் போய் விடுவார் என்று, ஆரம்பத்தில் நான் நினைத்தேன். பிறகு, பெண்கள் ஏன் எப்போதும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யோசித்தேன். உடனே, காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவை எடுத்து, அவனைப் படம் பிடிக்க ஆரம்பித்தேன்.

கமராவைக் கண்டதும் அந்த முச்சக்கர வண்டிச் சாரதி பயந்து விட்டான். உடனடியாக அங்கிருந்து வெளியேறினான். ஆனால், அதற்கு முன்பாகவே, முச்சக்கர வண்டியின் இலக்கத் தகட்டினை படம் பிடித்து விட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற அந்தப் பெண், குறித்த முச்சக்கர வண்டிச் சாரதி தன்னை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும், எனவே அந்த நபரைக் கைது செய்ய வேண்டுமெனவும் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்