வாகன விபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் காயம்; மோதிய வாகனத்தில் கஞ்சா சிக்கியது

🕔 October 22, 2017

முன்னாள் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன, வாகன விபத்தில் காயமடைந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை – கொழும்பு வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் பயணித்த வாகனத்துடன் மற்றொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சரின் வானத்துடன் மோதுண்ட வாகனத்தை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய போது, அதில் 04 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த வாகனத்தில் பயணித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments