கோட்டா விரைவில் கைதாவார்; கடந்த வாரம் கைது செய்ய வகுத்திருந்த திட்டம், கடைசி நேரத்தில் நிறுத்தம்

🕔 October 22, 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாவை கைது செய்வது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கிடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த வாரம் நாடு திரும்பிய போது, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயினும், சில அதிகாரிகளின் ஆலோசனை காரணமாக, அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலேயே, கோட்டா கைது செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

தான் விரைவில் கைது செய்யப்படவுள்ளமை தொடர்பில், கோட்டாவும் விழிப்புடன் உள்ளார் எனவும் மேற்படி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Comments