முதுகெலும்புள்ள ஒருவரிடம் பதவியை வழங்குமாறு, மஹிந்த தேசப்பிரியவுக்கு, சட்டத்தரணிகள் சங்கம் அறிவுரை

🕔 October 22, 2017

திர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய விலகி, தேர்தலை நடத்தக் கூடிய முதுகெலும்புள்ள ஒருவருக்கு அந்தப் பதவியினை வழங்க வேண்டும் என்று, சட்டத்தரணிகள் சங்கத்தின் இணைப்பாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“அடுத்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியாது போனால், பதவி விலகுவேன் என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் உரிமைக்காகப் பாடுபடுகின்ற ஒருவராக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இருப்பாராயின், நீதிமன்ற நடவடிக்கையொன்றினை அவர் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்