சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்: பிரதமர்

🕔 October 22, 2017

புதிய அரசியலமைப்புக் குறித்து சரியாகத் தெரிந்து கொள்ளாமல், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டினார்.

கொலனாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை, அலறி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், அரசியல் கட்சிகளின் பதில்களை உள்ளடக்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். ஆகவே, விவாதத்துக்கு வருவதற்கு முன்னர், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவற்றினைப் படிக்க முடியும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஊடகங்கள் தொடர்பிலும் பிரதமர் விமர்சனங்களை முன்வைத்தார்.

“புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளைச் சீர்குலைப்பதற்கு அச்சு ஊடகங்கள் முயற்சிக்கின்றன” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்