மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு

🕔 October 22, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்கப்படலாம் என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சி நடத்துகின்ற கூட்டங்களில், அந்தக் கட்சியில் பதவிகளை இழக்கும் எந்தவொரு நபரும் கலந்து கொள்ள முடியாது எனவும் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் சில அமைப்பாளர்கள், சுதந்திரக் கட்சிக்காக பணியாற்றத் தவறியமையினை அடுத்து, அமைப்பாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள், ஐக்கி மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தீர்மானங்களுக்குக் கட்டுப்படுதல் வேண்டும் என்றும், அமைச்சர் துமிந்த சுட்டிக்காட்டினார்.

இதில் தவறிழைப்பவர்கள், கூட்டமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்