ரோஹிங்ய அகதிகளை அச்சுறுத்திய தேரருக்கு விளக்க மறியல்

🕔 October 21, 2017

ரோஹிங்ய அகதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலவேக அமைப்பின் செயலாளர் அரம்பபொல ரத்னசார தேரரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் தேரரை ஆஜர் படுத்திய போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

கல்கிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பில் ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த தேரரை, பஸ் ஒன்றில் பயணிக்கும் போது நிட்டம்புவ பொலிஸாரார் நேற்று கைது செய்திருந்தனர்.

அகதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரம்பபொல ரத்னசார தேரரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ஆஜராகியிருக்கவில்லை.

தொடர்பான செய்தி: ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்