உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

🕔 October 24, 2017

ள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும் பிற்போடுவதற்கான முயற்சிகளையே அரசாங்கம் மேற்கொண்வ வருவதாக, எதிரணியினர் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்