அத்தியவசியப் பொருட்களின் நடமாடும் விற்பனை சேவை; கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கிறது

🕔 October 22, 2017

லொறிகள் முலம் அத்தியாவசிய பொருட்களின் நடமாடும் விற்பனை சேவையினை, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பிக்கவுள்ளது.

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்குகிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

வியாங்கொட, மினுவாங்கொட, கம்பஹா,  ராகம, கனேமுல்லை, மருதானை, ஹோமகம, கிரிபத்கொடமற்றும்  தெல்கந்த  ஆகிய இடங்களில் முதற்கட்டமாக நடத்தப்படும் இந்த நடமாடும் விற்பனை சேவையை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் றிஸ்வான் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்