சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி 0

🕔8.Sep 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று (08) மாலை நடைபெற்றது. பிரேரணைக்கு எதிராக 113 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 73 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்...
இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு 0

🕔8.Sep 2023

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்துக்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேச மயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...
தயாசிறியின் மனு நிராகரிப்பு

தயாசிறியின் மனு நிராகரிப்பு 0

🕔8.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் கட்சியின் தீர்மானத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சியில் தனது உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்றைய

மேலும்...
நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம்

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம் 0

🕔8.Sep 2023

தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று (08) காலமானார். அவருக்கு 57 வயதாகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். நடிகராகவும் இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, ராஜ்கிரண், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

மேலும்...
முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை 0

🕔8.Sep 2023

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் கண்டி மாவட்டம் – கங்கா இஹல கோரலே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மேற்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு 75,000 ரூபாய் அபராதத்தினையும் கம்பளை நீதவான் நிதிமன்றம் விதித்துள்ளது. குறித்த நபர்

மேலும்...
சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்

சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Sep 2023

பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் ‘ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்’ என்ற பெயரில் இலங்கை நேரப்படி – நேற்று முன்தினம் அதிகாலை 3.35 அளவில் ஆவணப் படம்

மேலும்...
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நிறைவேறியது

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நிறைவேறியது 0

🕔7.Sep 2023

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (07) இடம்பெற்றது. இதற்கமைய குறித்த  சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இதற்கமைய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தம் சட்டமூலமும் இன்று (07) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி

மேலும்...
போலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

போலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது 0

🕔7.Sep 2023

பாதுக்க பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறி, பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்கத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொவருவரை மொரோந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்து வருவதோடு, முகநூல் மூலம் சந்தேக நபருடன் நட்பாக இருந்துள்ளார். மொறொந்துடுவையில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்த சந்தேக நபர், தான் பாதுக்க

மேலும்...
எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔7.Sep 2023

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் நாடாளுமன்றில் இன்று (07) குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும்

மேலும்...
போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி

போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி 0

🕔7.Sep 2023

‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவை விடுதலை செய்யுமாறு, அதிகாரம் கொண்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அவரின் மகனும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ஹரக் கட்டா, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால்

மேலும்...
இலங்கையிலிருந்து இவ்வருடம் 4500க்கும் மேற்பட்டோர் தென்கொரியா சென்றுள்ளதாக தகவல்

இலங்கையிலிருந்து இவ்வருடம் 4500க்கும் மேற்பட்டோர் தென்கொரியா சென்றுள்ளதாக தகவல் 0

🕔7.Sep 2023

இலங்கையர்கள் 4556 பேர் இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களுக்குள் தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மேலும் 170 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் நேற்று முன்தினம் (03) தென் கொரியாவிற்கு சென்றுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 ஊடாக ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு

மேலும்...
மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு 0

🕔6.Sep 2023

– முன்ஸிப் அஹமட் – இலங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ள நிலையில், அதில் மலையக மக்களை குறிக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த

மேலும்...
புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Sep 2023

இருபத்தோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் நாடாளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் நாடாளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும்

மேலும்...
இலங்கையர் அபுதாபி அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை வென்றார்

இலங்கையர் அபுதாபி அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை வென்றார் 0

🕔6.Sep 2023

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் – அபுதாபி சீட்டிழுப்பில் (Series 255 Big Ticket Live draw) 20 மில்லியன் திர்ஹம் (இலங்கை மதிப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிகம்) பரிசை வென்றுள்ளார். துரைலிங்கம் பிரபாகர் என்பவருக்கு இந்த வெற்றித் தொகை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துரைலிங்கம் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு

மேலும்...
சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம்

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம் 0

🕔6.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமுன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்