சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

🕔 September 8, 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று (08) மாலை நடைபெற்றது.

பிரேரணைக்கு எதிராக 113 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 73 பேரும் வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின் போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆஜராகவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்