தயாசிறியின் மனு நிராகரிப்பு

🕔 September 8, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தும் கட்சியின் தீர்மானத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் தனது உறுப்புரிமையை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, அதனை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது.

தொடர்பான செய்தி: சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்