போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி

🕔 September 7, 2023

‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவை விடுதலை செய்யுமாறு, அதிகாரம் கொண்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அவரின் மகனும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ஹரக் கட்டா, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க – மேற்படி அமைச்சரும் அவரின் மகனும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், இதற்காக உள்ளக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாக, லங்காதீப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மீது விதிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை நீக்குமாறு – பொலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த அமைச்சரும் மகனும் அடிக்கடி அழுத்தம் கொடுப்பதால் பொலிஸ் அதிகாரிகள் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்தச் செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்