தற்போதைய காலகட்டத்துக்கு தீர்வாகாது: அவசரகால நிலையை ரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

தற்போதைய காலகட்டத்துக்கு தீர்வாகாது: அவசரகால நிலையை ரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை 0

🕔7.May 2022

அவசரகாலச் நிலைமையை ரத்துச் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலகட்டத்துக்கு அவசரகால நிலைமை தீர்வாகாது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அறிக்கை ஒன்றினூடாக அந்தச் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும். இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள்

மேலும்...
பதவி விலகுமாறு கோட்டா கோரிக்கை: திங்கள் அறிக்கை விடுகிறார் மஹிந்த

பதவி விலகுமாறு கோட்டா கோரிக்கை: திங்கள் அறிக்கை விடுகிறார் மஹிந்த 0

🕔7.May 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்குமாறு,

மேலும்...
இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்; வாக்குச் சீட்டைக் காட்டிய சஜித் பிரேமதாஸ: உண்மையில் யார் ‘பால் போத்தல்’?

இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்; வாக்குச் சீட்டைக் காட்டிய சஜித் பிரேமதாஸ: உண்மையில் யார் ‘பால் போத்தல்’? 0

🕔6.May 2022

– மரைக்கார் – பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, தனது வாக்குச் சீட்டில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அதனை பகிரங்கமாக காட்டியிருந்தார். இது குறித்து பலரும் பல்வேறு வகையான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி வருகின்றமையினைக் காண முடிகிறது.

மேலும்...
நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம்

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் 0

🕔6.May 2022

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலைமையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி நாட்டில் அவசர கால நிலையை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தியிருந்தார். பின்னர் சில நாட்களின் பின்னர் அது நீக்கப்பட்டிருந்தது.

மேலும்...
பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம் 0

🕔6.May 2022

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம்  பாலமுனை பொலிஸ்   காவலரண்  பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தில்  காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.  இதற்கமைய  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை  பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு இன்று வெள்ளிக்கிழமை

மேலும்...
விலகி விலகி விளையாடுதல்: பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் ராஜிநாமா

விலகி விலகி விளையாடுதல்: பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் ராஜிநாமா 0

🕔6.May 2022

பிரதி சபாநாயகராக நேற்று (05) தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிரதி சபாநாயகராகப் பதவி வகித்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏப்ரல் 03ஆம் திகதி ராஜிநாமா செய்தார். ஆயினும் அவரின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனையடுத்து ஏப்ரல் 30ஆம் திகதி அவர் தனது பதவியிலிருந்து விலகினார். இருந்த போதும்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர ராஜிநாமா

ராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர ராஜிநாமா 0

🕔6.May 2022

ராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர இன்று (06) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் ராஜிநாமா கடிதத்தைக் கையளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக இவர் பதவி வகித்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி அந்தத் தருணத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், எனினும் நாட்டில் நிலவும் சூழ்நிலை

மேலும்...
ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் அரச பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுவதென்ன?

ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் அரச பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுவதென்ன? 0

🕔6.May 2022

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பை பயன்படுத்தி இவ்வாறானதொரு தகவல் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படுவதாகவும், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...
பொலிஸ் வீதி காவலரணுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு: பாலமுனையில் பதட்டம்

பொலிஸ் வீதி காவலரணுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு: பாலமுனையில் பதட்டம் 0

🕔6.May 2022

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேசத்தில் பொலிஸாரின் வீதித் தடைக் காவலரண் ஒன்றினை பொதுமக்கள் தீ வைத்து எரித்துள்ளதோடு, அங்கிருந்த பொலிஸார் மற்றும் ஊர் காவல் படையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (05) இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. வீதித் தடைக் காவலரணில் இருந்த ஊர் காவல் படை

மேலும்...
அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதி நபர் பலி: விபத்து நடந்த போது வாகனத்தினுள் எம்.பி இருந்ததாக பொலிஸார் தெரிவிப்பு

அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதி நபர் பலி: விபத்து நடந்த போது வாகனத்தினுள் எம்.பி இருந்ததாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔5.May 2022

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதியதில்ட பாதசாரி ஒருவர் மரணமடைந்தார். பாலாவி – கல்பிட்டி வீதியில் மாம்புரி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. விபத்துக்குள்ளான நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்ததாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்

மேலும்...
நாடாளுமன்றில் நடத்தப்படும் நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டது: சாணக்கியன்

நாடாளுமன்றில் நடத்தப்படும் நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டது: சாணக்கியன் 0

🕔5.May 2022

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (05) உரையாற்றிய அவர்; நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் கூறினார். பிரதி சபாநாயகர் தெரிவுக்காக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவு செய்வார்களென தான்

மேலும்...
திட்டமிட்ட சதிகளால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளது: எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

திட்டமிட்ட சதிகளால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளது: எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔5.May 2022

நாட்டில் பெற்ரோல் போதுமானளவு கையிருப்பில் உள்ள போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் எரிபொருளுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகள் காணப்படுவதை காண முடிகின்றது. நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு

மேலும்...
பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு 0

🕔5.May 2022

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பிரதி சபாநாயகராக செயற்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – பதவி விலகியதை அடுத்தே இந்த புதிய தெரிவு இடம்பெற்றது. அரசாங்க கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் சியம்லாப்பிட்டியவின் பெயரும் எதிர்கட்சியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பெயரும் புதிய பிரதி சபாநாயகர் பதவிக்காக முன்மொழியப்பட்டன. இதனையடுத்து

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க, சுயாதீன குழு நிபந்தன

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க, சுயாதீன குழு நிபந்தன 0

🕔4.May 2022

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்காக 02 நிபந்தனைகளை முன்வைக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அந்த குழு நாடாளுமன்றில் இன்று (04) கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேறும் பட்சத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்க நடவடிக்கை

மேலும்...
பிரதமர் மஹிந்த நாடாளுமன்றில் நாளை விசேட உரை

பிரதமர் மஹிந்த நாடாளுமன்றில் நாளை விசேட உரை 0

🕔3.May 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (4) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அவர் அறிவிப்பாரென பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை – தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் கூறப்படுகிறது. நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்