எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு 0

🕔5.Feb 2021

– எம்.ஆர்.எம். வசீம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியில்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என, முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை

மேலும்...
இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல்

இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔4.Feb 2021

பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் இலங்கையர்கள் 129 பேரை கைது செய்வதற்குக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது. வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தேடப்படும் 129 குற்றவாளிகளில், 40 பேர் நிதிக்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன 0

🕔4.Feb 2021

நாட்டின் 73 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள்,  நிதியாளர் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.

மேலும்...
சுதந்திர தினைத்தையொட்டி 146 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு

சுதந்திர தினைத்தையொட்டி 146 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு 0

🕔4.Feb 2021

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பில் 146 கைதிகள் இன்று (04) விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட மன்னிப்பு நான்கு வகையானோருக்கு வழங்கப்படுகின்றது. 65 வயதுக்கு மேற்பட்ட, சிறைத்தண்டனையில் பாதி சிறைவாசம் அனுபவித்தோர். 50 வயதுக்கு மேற்பட்ட, 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தோர். தண்டனையின் பாதியை அனுபவித்த இளம் குற்றவாளிகள். அபராதம்

மேலும்...
நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி

நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி 0

🕔4.Feb 2021

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் ​ தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73

மேலும்...
பெரும்பான்மையினருக்கானதாக, சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அசாத் சாலி குற்றச்சாட்டு

பெரும்பான்மையினருக்கானதாக, சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அசாத் சாலி குற்றச்சாட்டு 0

🕔4.Feb 2021

சுதந்திரத்தின் சுவாசக் காற்றை சகல சமூகங்களும் நுகரும் வரைக்கும், இன்றைய தினத்தின் யதார்த்தங்களை உணர்வதில், சிறுபான்மை சமூகங்கள் சிரமப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று (04ஆம் திகதி) கொண்டாடப்படும் நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘அந்நிய அடக்கு

மேலும்...
அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம்

அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம் 0

🕔4.Feb 2021

அமைச்சரவையில் சிறியதொரு மறுசீரமைப்பினை, அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும், நான்கு ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதன்போது மனித உரிமைகளுக்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்படட்டுள்து. இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் தீரமானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் தீரமானம் 0

🕔3.Feb 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் வௌிவிவகார அமைச்சர் தினேஸ்

மேலும்...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போராட்டம்; தடைகளை மீறி தொடர்கிறது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போராட்டம்; தடைகளை மீறி தொடர்கிறது 0

🕔3.Feb 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 03 நாள் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நடைபவனியில்

மேலும்...
கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு

கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு 0

🕔2.Feb 2021

கிழக்கு மாகாணத்தில் 07 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையால், அவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்கள்

மேலும்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு 0

🕔1.Feb 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறு எதிர்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக ட்விட்டர் கணக்கில், இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோகள் –

மேலும்...
சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 0

🕔1.Feb 2021

இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வின் போது, சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை

மேலும்...
உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல்

உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல் 0

🕔1.Feb 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔1.Feb 2021

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேற்படி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி

மேலும்...
அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு

அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு 0

🕔1.Feb 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி செய்திகளுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி – தொற்று நோயியல் பிரிவு (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வைத்தியசாலையில் மோசமான குறைபாடுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்