இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல்

🕔 February 4, 2021

ல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் இலங்கையர்கள் 129 பேரை கைது செய்வதற்குக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது.

வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தேடப்படும் 129 குற்றவாளிகளில், 40 பேர் நிதிக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களாவர். 24 பேர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களைப் புரிந்தவர்களாவர்.

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் 87 குற்றவாளிகளுக்கு எதிராக நீல அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களில் பெரும்பாலோர் துபாய், ஐக்கிய அரபு ராஜியம், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (02) இந்தியாவின் சென்னையில் கைது செய்யப்பட்ட பாதாள உலக நபரும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘கிம்புல எல குணா’ என்பவரை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) மாநாடு மற்றும் இந்தியாவுடனான பிற இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்