ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் தீரமானம்

🕔 February 3, 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அதனை பகிரங்கப்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments