அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம்

🕔 February 4, 2021

மைச்சரவையில் சிறியதொரு மறுசீரமைப்பினை, அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும், நான்கு ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

இதன்போது மனித உரிமைகளுக்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்படட்டுள்து.

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சுமத்தியுள்ள அழுத்தத்தைக் குறைப்பதற்கானதொரு வழியாக, மேற்படி மனித உரிமைகளுக்கான அமைச்சு இருக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், மனித உரிமை தொடர்பில் இலங்கை அழுத்தத்துக்குள்ளான போது, 2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் இதேபோன்றதொரு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மனித உரிமைகளுக்கான அமைச்சராக பணியாற்றிய மஹிந்த சமரசிங்க, அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பில் அதே பதவிக்கு நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும் அமைச்சர் பதவியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்