தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன

🕔 February 4, 2021

நாட்டின் 73 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது.

இதன்போது பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள்,  நிதியாளர் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழுவினரால் சுதந்திர தினத்துக்கான மரியாதை அணிவகுப்பும் நடைபெற்றது.

சுதந்திர தினத்தினை கௌரவிக்கும் முகமாக மர நடுகையும் இடம்பெற்றது. இது இலங்கையின் 73வது சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால் 73 மரக் கன்றுகள் நடபட்டமை குறிபிடதக்கதாகும்.

இதேவேளை, ‘உள்நாட்டு சிவில் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கைத் தேசம் – பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வளமான நாடாக மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

இவ்விலக்கினை அடைந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களினதும் பொது மக்களினதும் பங்குபற்றுதலுடன் கூடிய வளமான நாட்டினை கட்டியெழுப்புதல் இன்றியமையாததாகும்’ என, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்