சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

🕔 February 1, 2021

ம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வின் போது, சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை பயன்படுத்துகின்றோம். சமுகத்தில் பல்வேறு தரப்பினர் இதில் உள்ள குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டினர்.

தேசிய கொடியில் சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தி வடிவமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். இதுதொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பில், பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இறுதி நடவடிக்கையாக இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இதனால் இம்முறை தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்தும் பொழுது முன்னர் பயன்படுத்திய தேசிய கொடியை நாம் பயன்படுத்துவோம்.

தேசிய கொடியில் எந்த மாற்றமும் இல்லை. சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனை வடிவமைப்பாளர்களுடனும், அரசாங்க அதிகாரிகளுடனும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்