தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி

தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி 0

🕔29.Jul 2017

புதிதாக ஓர் அரசாங்கத்தை தேவையேற்படின் தன்னால் நாளைய தினமே அமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்றாலும் அசுத்தமான அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு, தான் தயாரில்லை எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். “மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கம் தூய்மையின்றி

மேலும்...
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம் 0

🕔29.Jul 2017

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம்  நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எசல வீரகோன், சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும்

மேலும்...
புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔29.Jul 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்ட போதும், அந்த அமைப்பின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி  ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு 0

🕔28.Jul 2017

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உயர் மட்டத்தவர்களைச் சந்தித்து நவாஸ் ஷெரீப் கலந்துரையாடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது,  தனது சகோதரரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு நவாஸ்

மேலும்...
ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு 0

🕔28.Jul 2017

“மத்திய வங்கியியில் இடம்பெற்றுள்ள பிணை முறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும், பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு, கூட்டு எதிரணியினரான நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க

மேலும்...
நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔28.Jul 2017

கொக்கெய்ன் சம்பவத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, சபையின் இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய வாய் மூல வினாவுக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. தனியார் வழங்குநர் மூலமே பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்”

மேலும்...
தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை

தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை 0

🕔28.Jul 2017

– க. கிஷாந்தன் – ஆளில்லாமல் தூரத்தில் இருந்து ஓட்டும் வகையில் முச்சக்கர வண்டியொன்றினை நுவரெலியா இளைஞர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார். நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார (வயது 31) என்வர்தான், இவ்வாறானதொரு முச்சக்கரவண்டியை அமைத்துள்ளார். முச்சக்கர வண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயக்க கூடிய வகையில், இவர் மாற்றியமைத்துள்ளார். 05 நாட்களில் இதனை

மேலும்...
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா 0

🕔28.Jul 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பிரமராக பதவி வகிப்பதற்கு நவாஸ் ஷெரீப் தகுதியற்றவர் என, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையை அடுத்து, அவர் இந்த முடிவை மேற்கொண்டார். பனாமா பேப்பர் லீக் மோசடி தொடர்பில் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இது குறித்து

மேலும்...
ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம்

ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம் 0

🕔28.Jul 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் செனரத் கப்புக்கொட்டுவ நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார். இவர் மரணமாகும் போது, கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான கப்புக்கொட்டுவ, 2001ஆம் ஆண்டு, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரானார்.  

மேலும்...
கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம் 0

🕔27.Jul 2017

– ஆசிரியர் கருத்து – வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும் ஒரு நாயை அடித்து விரட்டுவதென்றாலும், அது தூங்கும் போது, அதைச் செய்யக் கூடாது என்பார்கள். அடுத்த மனிதனின் வலியில் மகிழ்வது, கொடிய மிருகத்தின் குணத்துக்கு ஒப்பானதாகும். அமைச்சர்

மேலும்...
நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல்

நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔27.Jul 2017

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளில், 89 விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இவற்றில் சட்ட அறிவுரை பெறப்பட்ட 12 முறைப்பாடுகள் தொடர்பாக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ்

மேலும்...
நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை

நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை 0

🕔27.Jul 2017

– க. கிஷாந்தன் –நீண்ட வறட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தத் தவறினால், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்று, அமைச்சரவை தீர்மானித்தமையின் மூலமாக, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில்

மேலும்...
கைத்தொழில் வளர்ச்சிக்கென கட்டமைப்பொன்றை யுனிடோ செயற்படுத்தவுள்ளது: அமைச்சர் றிசாத்திடம் பிராந்திய பிரதிநிதி தெரிவிப்பு

கைத்தொழில் வளர்ச்சிக்கென கட்டமைப்பொன்றை யுனிடோ செயற்படுத்தவுள்ளது: அமைச்சர் றிசாத்திடம் பிராந்திய பிரதிநிதி தெரிவிப்பு 0

🕔27.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் சபை 9.2 இலக்கினைக் கொண்ட  கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த முடியும் என்றும், புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் தெரிவித்தார். கைத்தொழில்

மேலும்...
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையிலேயே, டிரம்ப் இந்த தடாலடியான அறிவிப்பினை விடுத்துள்ளார். உலகளவில் மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், திருநங்கைகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்