நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை

🕔 July 27, 2017

– க. கிஷாந்தன் –

நீ
ண்ட வறட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை, மிகவும் பலனுள்ளதாக அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்வது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்