ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு

🕔 July 28, 2017

“மத்திய வங்கியியில் இடம்பெற்றுள்ள பிணை முறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும், பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு, கூட்டு எதிரணியினரான நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க தெரிவித்தார்.

கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. எனினும், பொலிஸ் மா அதிபர் தற்போது சட்டத்தை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாக மாற்றுகிறார். வடக்கில் ஒரு விதமாகவும், தெற்கில் மற்றொரு விதமாகவும் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

மேலும், அரசாங்கம் வகை தொகையின்றி, தேசிய வளங்களை வெளி நாடுகளுக்கு தாரை வார்க்கிறது. ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் சனிக்கிழமை (நாளை) கைச்சாத்திடப்படவுள்ளது. இது மிகவும் பாரதூரமானதாகும். ஏனெனில், ஹம்பாந்தோட்ட முறைமுகமானது, நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய இடம் வகிக்கவுள்ளது.

துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக அர்ஜுன ரணதுங்க பதவி வகித்தபோது, அவர் அந்த ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லை. எனவே, அவரை அந்த அமைச்சிலிருந்து நீக்கி விட்டு, தற்போது தேசியப்பட்டியல் மூலம், தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக, குறித்த உடன்படிக்கையை செய்து கொள்வதற்கு நடடிவடிக்கை எடுத்துள்ளனர்.

அவ்­வு­டன்­­டிக்­கைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­­ரவையின் அனுமதி பெறப்பட்டதுடன், வெள்ளிக்கிழமை (இன்று) நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, எதிர்வரும் சனிக்கிழமை (நாளை) கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏன் இவ்­வாறு அவ­­­மாக நடவடிக்கை எடுக்க வேண்டும்? இந்த உடன்படிக்கைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் இடம்­பெற்­றுள்ள மோச­டிக்காக, அமைச்சர் ரவி கருணாநாயக்க மாத்திரமல்லாது, நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. எனவே, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும் பதவியிலிருந்து விலக்கி விட்டு, குறித்த குற்றச்சாட்டிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு எத்தனிக்கலாம். எனினும், அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.

ஆகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு, கூட்டு எதிரணி எதிர்பார்த்துள்ளது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்