அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

🕔 July 27, 2017

மெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையிலேயே, டிரம்ப் இந்த தடாலடியான அறிவிப்பினை விடுத்துள்ளார்.

உலகளவில் மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகி வருகின்ற காலகட்டத்திலும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை இணைத்துக் கொள்ளும் திட்டத்தினை, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கொண்டு வந்திருந்தார். இதற்கு  உலகளவில் பாரிய வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த நிலையிலேயே, அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் கிடையாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்த பல திட்டங்களை டிரம்ப் ரத்துச் செய்து வரும் நிலையிலேயே, இந்த அறிவிப்பினையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்; ‘அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணிபாற்றுவதை அரசாங்கம் அனுமதிக்காது என்பதை பரிந்துரைக்கிறேன். அமெரிக்க ராணுவம் மிகப் பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ட்டிரம்ப்பின் இந்த அறிவிப்பினால் அமெரிக்காவின் ராணுவத்தினுடைய அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்