விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு

விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

றக்பி வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, அவரை குற்றப் புலனாய்வு பிரிவு அழைத்திருந்த நிலையில், தன்னால் வர முயாது என்று அவர அறிவித்துள்ளார். குறித்த விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை காலை 09 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு அழைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

மேலும்...
குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும்

குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும் 0

🕔27.Jul 2017

கிழக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 02 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில்

மேலும்...
கரடி தாக்கியதில், தேன் எடுக்கச் சென்றவர் படுகாயம்

கரடி தாக்கியதில், தேன் எடுக்கச் சென்றவர் படுகாயம் 0

🕔27.Jul 2017

– எப். முபாரக் –தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற நபயொருவரை கரடி தாக்கிய சம்பவம் நேற்று புதன்கிழமை திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்வெவ காட்டுப்பகுதியில் இடம்பெற்றது. தாக்குதலுக்குள்ளான நபர், பலத்த காயகளுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.அக்போபுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய எல்.டபிள்யு. சோமரத்தின பண்டா என்பவரே

மேலும்...
மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0

🕔26.Jul 2017

– ஆர். ஹஸன் –   மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து நடத்துகின்ற மலேசியாவின் சர்வதேச மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்டீவ் கிரிவ்விட்ஸ் தலைமையிலான குழுவினருக்கும், மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் கல்வித்துறை பங்களிப்பு பற்றிய விசேட

மேலும்...
எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம்

எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம் 0

🕔26.Jul 2017

கொலன்னாவ மற்றும் முத்துரஜவெல எரிபொருள் களஞ்சியசாலைகளில் இருந்து எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கையினை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கான உடன்பாட்டுக்கு வந்தமையினை அடுத்து, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக ராணுவ பேச்சாளர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள்

மேலும்...
கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை

மேலும்...
புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை பாரதூரமான தாக்குதல்களில் ஈடுபட்டதாக, அந்த அமைப்புக்கு எதிராக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என, குறித்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவில்

மேலும்...
ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார்

ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔26.Jul 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாகத் தெரியவருகிறது. யூனியன் பிளேஸ், கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள ‘விசும்பாய’ எனப்படும் இல்லத்தினை, தனக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்குமாறு, குறித்த அமைச்சரவைப் பத்திரங்களில் ஒன்றினூடாக, ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும், ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டார்.

மேலும்...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம் 0

🕔26.Jul 2017

– றிசாத் ஏ காதர் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபை கூட்டத்தில் இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கூட்டம், சங்க

மேலும்...
எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு

எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2017

பெற்றோலிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை மீறி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பவுசர்களின் டயர்களிலுள்ள காற்றைப் பிடுங்கி,  தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு

அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Jul 2017

எரிபொருளை களஞ்சியப்படுத்துதல் மற்றும் வினியோகித்தல் ஆகியவற்றினை கட்டாய சேவைகளாக அறிவித்து, நேற்று செவ்வாய்கிழமை இரவு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களை உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. பணிக்குத் திரும்பத் தவறும் இலங்கை பெற்றோலியக்

மேலும்...
தேசியக் கொடியை கழற்றி, மண்ணுக்குள் புதைத்து விட்டு, மாயமான நபர்; வவுனியா மாவட்ட செயலகத்தில் சம்பவம்

தேசியக் கொடியை கழற்றி, மண்ணுக்குள் புதைத்து விட்டு, மாயமான நபர்; வவுனியா மாவட்ட செயலகத்தில் சம்பவம் 0

🕔25.Jul 2017

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியினை கழற்றிய நபரொருவர், அதனை மண்ணுக்குள் புதைத்து விட்டுச் சென்ற சம்பவம், இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கறுப்பு வாகனமொன்றில் வந்த நபரொருவர், தேசியக் கொடியைக் கழற்றியெடுத்து மைத்தானத்தில் புதைத்ததாகவும், இதனைத் தாம் தடுப்பதற்கு முயற்சித்த போது, அவர் தப்பிச் சென்று விட்டதாகவும், மாவட்ட

மேலும்...
வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு

வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு 0

🕔25.Jul 2017

றகர் வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் யோசித ராஜபக்ஷ ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யோசித ராஜபக்ஷவின் பெண் நண்பி ஒருவருடன் வசிம் தாஜுத்தீன் உறவு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக வசிம்

மேலும்...
‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார்

‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார் 0

🕔25.Jul 2017

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். ஏ.ஆர். மன்சூர் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 85 வயது. வர்த்தக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான ஏ.ஆர். மன்சூர், குவைத்

மேலும்...
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம் 0

🕔24.Jul 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது. திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்