எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம்
கொலன்னாவ மற்றும் முத்துரஜவெல எரிபொருள் களஞ்சியசாலைகளில் இருந்து எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நடவடிக்கையினை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கான உடன்பாட்டுக்கு வந்தமையினை அடுத்து, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக ராணுவ பேச்சாளர் கூறினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று நள்ளிரவிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கையினை அத்தியவசிய சேவையாக, வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் அறிவித்தது.
இதனையடுத்து, எரிபொருள் விநியோக நடவடிக்கையினை ராணுவத்தினர் மேற்கொள்ளத் தொடங்கினர்.
இந்த நிலையில், பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் தமது பணிப் பகிஷ்கரிப்பினை வாபஸ் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.