எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு

🕔 July 26, 2017

பெற்றோலிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை மீறி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பவுசர்களின் டயர்களிலுள்ள காற்றைப் பிடுங்கி,  தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த பவுசர்களின் டயர்களில் காற்று வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அந்த தடைகளை முறியடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்