வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு

🕔 July 25, 2017

கர் வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் யோசித ராஜபக்ஷ ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யோசித ராஜபக்ஷவின் பெண் நண்பி ஒருவருடன் வசிம் தாஜுத்தீன் உறவு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக வசிம் மீது யோசித ஆத்திரம் கொண்டிருந்ததாகவும் ஊடகங்கள் பல்வேறு கோணங்களில் செய்திகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இந்த நிலையில், நாளை மறுநாள் வியாழக்கிழமை சிராந்தி ராஜபக்ஷவை அழைத்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவு, வெள்ளிக்கிழமை யோசித ராஜபக்ஷவை அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவரின் குடும்பத்தார் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை, ஆட்சியாளர்களில் சிலரே தடுத்து வருவதாக புகார்கள் எழுந்திருந்தன. இந்த நிலையில், அது தொடர்பாக அண்மையில் அமைச்சரவைக் கூட்டமொன்றில் ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறானதொரு சூழந்நிலையிலேயே, வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, சிராந்தி மற்றும் யோசித ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்