ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார்

🕔 July 26, 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாகத் தெரியவருகிறது.

யூனியன் பிளேஸ், கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள ‘விசும்பாய’ எனப்படும் இல்லத்தினை, தனக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்குமாறு, குறித்த அமைச்சரவைப் பத்திரங்களில் ஒன்றினூடாக, ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும், ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டார்.

‘விசும்பாய’ என்பது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைச்சர்கள் தங்கிச் செல்லும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாவது அமைச்சரவைப் பத்திரம் மூலம், இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள இலங்கை யாத்திரீகள் தங்குமிடத்தின் பணியிலுள்ள அதிகாரியை, அந்த நாட்டிலுள்ள மகாபோதி சங்க இலங்கைக் கிளைக்கு மாற்றுமாறு ரவி கருணாநாயக்க அனுமதி கோரியிருந்தார். ஆனால், அதையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டார்.

மூன்றாவது அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம், தனக்கான பிரதம அதிகாரியொருவரை நியமிப்பதற்கு அனுமதி வேண்டியிருந்தார். எவ்வாறாயினும், அதனையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டார் எனத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்