தேசியக் கொடியை கழற்றி, மண்ணுக்குள் புதைத்து விட்டு, மாயமான நபர்; வவுனியா மாவட்ட செயலகத்தில் சம்பவம்
வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியினை கழற்றிய நபரொருவர், அதனை மண்ணுக்குள் புதைத்து விட்டுச் சென்ற சம்பவம், இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு வாகனமொன்றில் வந்த நபரொருவர், தேசியக் கொடியைக் கழற்றியெடுத்து மைத்தானத்தில் புதைத்ததாகவும், இதனைத் தாம் தடுப்பதற்கு முயற்சித்த போது, அவர் தப்பிச் சென்று விட்டதாகவும், மாவட்ட செயலகத்தில் கடமையிலிருந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மாவட்ட செயலத்தில் கடமையிலிருந்த பொலிஸார், குறித்த தேசியக் கொடியை மீட்டெடுத்து, பழையபடி ஏற்றினர்.