குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும்

🕔 July 27, 2017

கிழக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 02 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணத்திலும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்