வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

🕔 July 29, 2017

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார்.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எசல வீரகோன், சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் எசல வீரகோனன் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்