பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா

🕔 July 28, 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பிரமராக பதவி வகிப்பதற்கு நவாஸ் ஷெரீப் தகுதியற்றவர் என, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையை அடுத்து, அவர் இந்த முடிவை மேற்கொண்டார்.

பனாமா பேப்பர் லீக் மோசடி தொடர்பில் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள 08 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்திருந்ததுடன், விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கை விசாரணை செய்த அந்நாட்டு உயர் நீதிமன்றம்; நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகிப்பதற்கான தகுதியை இழந்து விட்டதாக அறிவித்தது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, ‘மோசக் பொன்சிகா’ என்ற சட்ட நிறுவனம், தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் சில காலங்களுக்கு முன்னர் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு எனும் தலைப்பில், உலக தலைவர்கள், இந்தியர்கள் 500 பேர் பணம் பதுக்கி வைத்துள்ளமை அம்பலமாகிது. இந்தப் பட்டியலில் இலங்கையர்களின் பெயர்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்