தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி

🕔 July 29, 2017

புதிதாக ஓர் அரசாங்கத்தை தேவையேற்படின் தன்னால் நாளைய தினமே அமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

என்றாலும் அசுத்தமான அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு, தான் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கம் தூய்மையின்றி காணப்பட்டமையினாலேயே, அதிலிருந்து தான் விலகவேண்டிய நிலையேற்பட்டது. தற்போதுள்ள அரசாங்கமும் தூய்மையற்றது என்றால் அந்த இடத்தில் என்னால் இருக்க முடியாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின், அது தூய்மையான அரசாங்கமாகவே இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்