மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு

🕔 July 27, 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தத் தவறினால், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளனர்.

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்று, அமைச்சரவை தீர்மானித்தமையின் மூலமாக, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பதவிக் காலம் நிறைவடையும் கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்தி வைக்கும் நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படாது விட்டால், அது தொடர்பில், தான்  ஜனாதிபதி சட்டத்தரணி ருமேஷ் டி சில்வா ஊடாக, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்