நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல்

🕔 July 27, 2017

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளில், 89 விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இவற்றில் சட்ட அறிவுரை பெறப்பட்ட 12 முறைப்பாடுகள் தொடர்பாக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்ட விபரங்களை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய 56 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 10 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாரியளவிலான நிதி மோசடிகள் குறித்து ஆராய, 2015ம் ஆண்டு பெப்ரவரி 13ம் திகதி நிதி குற்ற விசாரணைப் பிரிவு, அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்