தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை

🕔 July 28, 2017

– க. கிஷாந்தன் –

ளில்லாமல் தூரத்தில் இருந்து ஓட்டும் வகையில் முச்சக்கர வண்டியொன்றினை நுவரெலியா இளைஞர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார்.

நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார (வயது 31) என்வர்தான், இவ்வாறானதொரு முச்சக்கரவண்டியை அமைத்துள்ளார்.

முச்சக்கர வண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயக்க கூடிய வகையில், இவர் மாற்றியமைத்துள்ளார். 05 நாட்களில் இதனை இவர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட முச்சக்கர வண்டியை, தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பார்வையிளர்களாக கூடியிருந்த மக்கள் முன்னிலையில் றிமோட் கொண்ரோல் ஊடாக ஓட்டிக் காட்டினார்.

தனது சொந்த செலவில் தன்னிடம் உள்ள முயற்சியை கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த முச்சக்கரவண்டியை போல, ரிமோட் கொண்ரோல் மூலம் கட்டுப்படுத்த கூடிய இன்னும் பல இயந்திரங்களை எதிர்காலத்தில் கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்த மேற்படி இளைஞர்; அதற்கு பொருளாதார ரீதியில் உதவிகளை செய்யுமிடத்து இன்னும் பல்வேறு வகையான தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்