கைத்தொழில் வளர்ச்சிக்கென கட்டமைப்பொன்றை யுனிடோ செயற்படுத்தவுள்ளது: அமைச்சர் றிசாத்திடம் பிராந்திய பிரதிநிதி தெரிவிப்பு

🕔 July 27, 2017

 

– சுஐப் எம் காசிம் –

லங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் சபை 9.2 இலக்கினைக் கொண்ட  கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த முடியும் என்றும், புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் தெரிவித்தார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இத்தகவலை வெளியட்டார். இச்சந்திபில் யுனிடோவின் இலங்கைக்கான பிரதிநிதி நவாஷ் ரஜாப்டின், அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் ஹிமாலி ஜினதாஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

யுனிடோ பிராந்தியப் பிரதிநிதி  மேலும் கூறுகையில்;

“நிலையான அபிவிருத்தி இலக்கு 9 ஆனது; உட்கட்டமைப்பு, கைத்தொழில் மயமாக்கல் மற்றும் புத்தாக்கம் ஆகிய மூன்று துறைகளில் தனது கவனத்தை செலுத்துகின்றது.

அத்துடன் நிலையான அபிவிருத்தி இலக்கு 9ஆனது; உட்கட்டமைப்பு நெகிழ்வு கட்டுமானம், பிரத்தியேக ஊக்குவிப்பு மற்றும் நிலையான கைத்தொழிற்றுறை மற்றும் புத்தாக்கச் செயற்பாடுகளை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை மையமாக கொண்டே தமது இலக்கை நகர்த்துகிறது” என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்;

“இலங்கைக்கும் யுனிடோவுக்குமிடையில் நீண்டகால வரலாற்று தொடர்புகள் உண்டு. அண்மைகாலமாக சக்தியைப் புதுபித்தல், சுற்றாடல், கழிவு முகாமைத்துவம், கறுவா வாசனைத் திரவியத்தின் தரம் மற்றும் வியாபார ஊக்குவிப்பு, ஆகியவற்றில் இலங்கையுடன் யுனிடோ பங்குதாரராக மாறியிருக்கின்றது.

எதிர்காலத்தில் நிலைபேறான கைத்தொழில்  வளர்ச்சி
, முதலீடு மற்றும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாண்மை ஆகிய துறைகளிலும் யுனிடோ தலையீடுகளைச் செலுத்தி இலங்கையானது கைத்தொழில் துறையில் உத்வேகத்தை எட்டுவதற்கு உதவும்.

அத்துடன் இலங்கையின் உத்தேசிக்கப்பட்ட கைத்தொழில் மறுசீரமைப்புக்கும் அது உதவ உள்ளது. புதிய கைற்தொழில்
 பேட்டை, விவசாய, வர்த்தகப், பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட  உபதுறைகள், விவசாயிகளின் சந்தைவாய்ப்பு , விவசாய உற்பத்தி பொருட்கள் சேகரிப்பு மற்றும் களஞ்சியப்படுத்தல், உணவு பதனிடல், மற்றும் அதனை அடைத்தல், , தோற்பொருட்கள் உற்பத்தித்துறை மற்றும் ஏற்றுமதி  ஆகியவற்றிலும் யுனிடோ தனது பங்களிப்பை நல்கும்” என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறுகையில்;

“நாட்டின் கைத்தொழில் அபிவிருத்திக்கு யுனிடோ மேற்கொண்டுவரும் உதவி மற்றும் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். யுனிடோவுடன் சேர்ந்து, தோல் உற்பத்தி மற்றும் தோல் பதனிடல், தரம் உயர்த்தல் ஆகிய உபதுறைகளின் செயற்பாடுகளைக் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

ஏற்கனவே நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள 0
வருட கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் தொடர்ச்சியான பாரம்பரிய உதவியாகவே இதனை கருதுகிறோம். யுனிடோவின் உதவியுடன் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அக்கடமியினால் கறுவா தொழிலானது 01பில்லியன் டொலர் இலக்கை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருவதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தப் பரீட்சார்த்த
, சிறந்த, நல்ல, உற்பத்திச் செயற்பாடு கறுவா ஏற்றுமதியில் உச்ச இலக்கை இலங்கை அடைவதற்கு வழிவகுத்துள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்