தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை

தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை 0

🕔9.Feb 2016

தனது தலைப்பாகையை (Turban) கழற்ற  மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்ற வாரிஸ் அலுவாலியா (41 வயது) எனும் சீக்கியர் ஒருவருக்கே, இந்த நிலைமை ஏற்பட்டது. மேற்படி நபர் – மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக நேற்று

மேலும்...
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றுக்குள் குழப்படி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றுக்குள் குழப்படி 0

🕔9.Feb 2016

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தினுள் தற்போது குழப்பத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியானதொரு குழுவாக சபைக்குள் இயங்குவதை அனுமதிக்குமாறு விடுத்திருந்த வேண்டுகோளினை, சபாநாயகர் நிராகரித்தமையினை அடுத்தே, இவர்கள் இந்த குழப்ப நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணியில் 50க்கும் மேற்பட்ட ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும்...
நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு 0

🕔9.Feb 2016

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான  நபரொருவருக்கு 50 ஆயிரம் ரூபாவினை நஷ்ட ஈடாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமலி ரணவீர இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்கு வெளியில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது மேற்படி நபர் பொலிஸாரின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம் 0

🕔9.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று செவ்வாய்கிழமை சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார். ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக, மறைந்த காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி பிறந்த சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின்போது

மேலும்...
ஹூசைன், ரணில் சந்திப்பு

ஹூசைன், ரணில் சந்திப்பு 0

🕔9.Feb 2016

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று செவ்வாய்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் சட்டவாட்சியை வலுப்படுத்துவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியங்கள் தொடர்பில் பேசப்பட்டது. மேலும், இலங்கையில் மனித உரிமையினைப் பாதுகாப்பது குறித்தும் இந்தச் சந்திப்பின்போது

மேலும்...
புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம்

புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம் 0

🕔9.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பான இறுதி முடிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. அந்தவகையில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டுமென,

மேலும்...
சிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு

சிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு 0

🕔9.Feb 2016

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை, இம்மாதம் 23 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். இதேவேளை, விளக்க மறியலில் உள்ள நிலையில்  சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிசிக்சை பெற்றுவரும் அவரை, கொழும்பு தேசிய

மேலும்...
மனித உரிமை ஆணையாளர்: எனக்கு இதுவும் தெரியும்

மனித உரிமை ஆணையாளர்: எனக்கு இதுவும் தெரியும் 0

🕔9.Feb 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் இன்று செவ்வாய்கிழமை ஊடகவியாலாளர்கள் மத்தியில் சொற்ப நேரத்துக்கு தன்னை புகைப்படக் கலைஞராக மாற்றிக் கொண்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தனுக்கு, மனித உரிமை ஆணையாளர் ஹூசைனுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு முன்னதாகவே,

மேலும்...
துருக்கியிடமிருந்து வீடுகளைப் பெறுவது தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்

துருக்கியிடமிருந்து வீடுகளைப் பெறுவது தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல் 0

🕔8.Feb 2016

– ஷபீக் ஹுஸைன்- நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், துருக்கி நாட்டின் பிரதமர் அஹமட் டவுடோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் ஹக்கீமுக்கும் துருக்கி பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை காலை, துருக்கி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது, நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும்

மேலும்...
மனித உரிமை ஆணையாளரின் வருகை, மிகப் பெரியதொரு நகைச்சுவை: கோட்டா விசனம்

மனித உரிமை ஆணையாளரின் வருகை, மிகப் பெரியதொரு நகைச்சுவை: கோட்டா விசனம் 0

🕔8.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகையானது மிகப் பெரியதொரு நகைச்சுவையாகும் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்

மேலும்...
யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த

யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த 0

🕔8.Feb 2016

யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் கையெழுத்திடும் நடவடிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். கொழும்பு – 01 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தஹலோக விகாரையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டு மகஜரில் கையெழுத்திட்டார். யுத்தத்தில் ஈடுபட்ட படை

மேலும்...
வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு

வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு 0

🕔8.Feb 2016

– க. கிஷாந்தன் – இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர். நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள்

மேலும்...
பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார்

பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார் 0

🕔8.Feb 2016

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவு முறையானவரும், ஸ்வதேசி குழும நிறுவனத்தின் தலைவருமான அமரி விஜேவர்த்தனவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு, அமரி விஜேவர்த்தனவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்த டொக்டர் கிறிஸ் நோனிஸ் 2014 ஆம் ஆண்டு, அவருடை

மேலும்...
சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம்

சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம் 0

🕔8.Feb 2016

ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்கிழமை சபாநாயகர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த காணியமைச்சர் எம்.கே.ஏ.டி.டிஸ். குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகாவை நியமிப்பது தொடர்பில் அந்தக்

மேலும்...
திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை

திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை 0

🕔8.Feb 2016

லங்காபுத்ர வங்கியில் 02 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட கடன் தொகையினைப் பெற்று திருப்பிச் செலுத்தாக 17 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அந்த வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தன தெரிவித்தார். லங்காபுத்ர வங்கியில் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தொடர்பில்,  நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்