ஹூசைன், ரணில் சந்திப்பு

🕔 February 9, 2016

Husain+Ranil - 0123.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று செவ்வாய்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, நாட்டில் சட்டவாட்சியை வலுப்படுத்துவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியங்கள் தொடர்பில் பேசப்பட்டது.

மேலும், இலங்கையில் மனித உரிமையினைப் பாதுகாப்பது குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்து.

இலங்கைக்கு கடந்த 06 ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைன், நாளை புதன்கிழமை திரும்பிச் செல்கிறார்.

ஏற்கனவே யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்குச் சென்று முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மதப் பெரியார்களை – ஆணையாளர் சந்தித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்