யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த
யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் கையெழுத்திடும் நடவடிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு – 01 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தஹலோக விகாரையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டு மகஜரில் கையெழுத்திட்டார்.
யுத்தத்தில் ஈடுபட்ட படை வீரர்களை, சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கும் மேற்படி மகஜரில் 10 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.