பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார்

🕔 February 8, 2016

Amari Wijewardena - 074பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவு முறையானவரும், ஸ்வதேசி குழும நிறுவனத்தின் தலைவருமான அமரி விஜேவர்த்தனவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க, நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு, அமரி விஜேவர்த்தனவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்த டொக்டர் கிறிஸ் நோனிஸ் 2014 ஆம் ஆண்டு, அவருடை பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

இந்த வெற்றிடத்துக்கே அமரி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.

அமரி விஜேவர்த்தவின் பாட்டனாரான லூயிஸ் விஜேவர்த்தனவும், ரணில் விக்கிரமசிங்கவின் தாய்வழி பாட்டனாரான டி.ஆர். விஜேவர்த்தனவும் சகோதரர்களாவர்.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுக்கும், அமரி விஜேவர்த்தன உறவு முறையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்