நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

🕔 February 9, 2016

Judgement - 01பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான  நபரொருவருக்கு 50 ஆயிரம் ரூபாவினை நஷ்ட ஈடாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமலி ரணவீர இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்கு வெளியில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது மேற்படி நபர் பொலிஸாரின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார்.

ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் கலைத்துக் கொண்டிருந்த சமயம், வேலை முடிந்து வீடு செல்வதற்காக கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்த – தான் தாக்கப்பட்டதாகவும், அதற்காக உரிய நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி, குறித்த நபர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

2014ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த துமிந்த கபுஆராச்சி என்பவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி, குறித்த நபருக்கு 50,000 ரூபாவினை நஷ்டஈடாக வழங்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமாலி ரணவீர உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்