வெளிநாட்டுப் பொறிமுறை தேவையில்லை; ஹுசைனிடம் மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு
🕔 February 8, 2016



– க. கிஷாந்தன் –
இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்யட் ராஅத் அல் ஹூசைன், இன்று முற்பகல் கண்டி சென்றார்.
இதன்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்த வேளையிலேயே, வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என மகாநாயக்க தேரர்கள் கூறினர்.
இந்த சந்திப்பில், இலங்கைக்கான தனது பயணத்தின் நோக்கம் குறித்து மகாநாயக்கர்களிடம் ஆணையாளர் விபரித்தார்.
முன்னதாக, தலதா மாளிகைக்கு சென்ற ஆணையாளர் ஹுசைனை, பஸ்நாயக்க நிலமே வரவேற்றார். பின்னர் இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.


Comments



