தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை

🕔 February 9, 2016

Waris - Turban - 0111னது தலைப்பாகையை (Turban) கழற்ற  மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்ற வாரிஸ் அலுவாலியா (41 வயது) எனும் சீக்கியர் ஒருவருக்கே, இந்த நிலைமை ஏற்பட்டது.

மேற்படி நபர் – மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக நேற்று திங்கட்கிழமை, விமான நிலையம் வந்திருந்த போது, பாதுகாப்பு சோதனையின் நிமித்தம் அதிகாரிகள் அவரது தலைப்பாகையை அகற்றுமாறு கூறினர்.

ஆனால், அதற்கு அவர் உடன்படவில்லை. இதனால் அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அலுவாலியா ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்;

“என்னிடம் அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால் இது எனது நம்பிக்கை. நான் எப்போதெல்லாம் பொதுவிடத்தில் தோன்றுகிறேனோ, அப்போதெல்லாம் இதை அணிந்து கொள்கிறேன். எனவே இதை அகற்ற முடியாது எனக் கூறினேன். ஆனால் அதிகாரிகள் சமாதானம் அடையவில்லை. அவர்களுக்குள் பேசிக் கொண்ட அதிகாரிகள், ‘தலைப்பாகையை அகற்றும் வரை உங்களுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை’ என்று கூறினார்கள்” என்றார்.

அமெரிக்காவில் சீக்கிய மதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆர்வலராக அலுவாலியா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்