புதிய கட்சியின் தலைவர் யார்: மஹிந்த வீட்டில் முக்கிய கூட்டம்

🕔 February 9, 2016

Mahinda - 854ஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பான இறுதி முடிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது.

அந்தவகையில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டுமென, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், மஹிந்தவின் சகோதரர்களான கோட்டாபய ராஜக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோரும் புதிய கட்சிக்கு பொருத்தமான தலைவர்கள் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் புதிய கட்சியொன்றின் தேவை குறித்து ராஜபக்ஷக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்