ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றுக்குள் குழப்படி

🕔 February 9, 2016

Parliament - 976ன்றிணைந்த எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தினுள் தற்போது குழப்பத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியானதொரு குழுவாக சபைக்குள் இயங்குவதை அனுமதிக்குமாறு விடுத்திருந்த வேண்டுகோளினை, சபாநாயகர் நிராகரித்தமையினை அடுத்தே, இவர்கள் இந்த குழப்ப நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணியில் 50க்கும் மேற்பட்ட ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில், சிறிலங்கா சுதந்திக் கட்சியைச் சேர்ந்த கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்