துருக்கியிடமிருந்து வீடுகளைப் பெறுவது தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்
🕔 February 8, 2016



– ஷபீக் ஹுஸைன்-
நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், துருக்கி நாட்டின் பிரதமர் அஹமட் டவுடோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமைச்சர் ஹக்கீமுக்கும் துருக்கி பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை காலை, துருக்கி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும் மக்களுக்கும், இலங்கையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


Comments



