திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை

🕔 February 8, 2016

Lankaputhra Chairman Lasantha Goonewardena - 011ங்காபுத்ர வங்கியில் 02 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட கடன் தொகையினைப் பெற்று திருப்பிச் செலுத்தாக 17 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அந்த வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தன தெரிவித்தார்.

லங்காபுத்ர வங்கியில் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தொடர்பில்,  நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான கோப்புக்களை சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி கடன்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், சில வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் அவர் வங்கியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

லங்காபுத்ர வங்கியின் சில பணியாளர்கள் மற்றும் கடனைப் பெற்றவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

லங்காபுத்ர வங்கியில் மேற்படி கடன் தொகையானது கடந்த ஆட்சியில் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்